|
|
|
|
| Wednesday 8 October, 2008 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Tamil Songs
இந்தப் பாடலுக்கு ஒரு பெருமை உண்டு. இளையராஜாவின் இசைக்கு தமிழகமே மெய்மறந்து காது கொடுத்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, முற்றிலும் புதுமையான அதே சமயம் மறக்க முடியாத தமிழ் வரிகளால் அலங்கரித்து இந்தப் பாடல் மூலம் எல்லாரையும் தன் பக்கம் கவர்ந்தவர் டி.இராஜேந்தர், எம்.ஏ. தவிர, ஹிந்திப் பாடல்களின் தாக்கம், டிஸ்கோ, மேற்கத்திய இசை இவைகளெல்லாம் தலை தூக்கிக்கொண்டிருந்த தருணம் அது. அந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு மெட்டுப்போட்டு, நல்ல வரிகளையும் கொடுத்த டி. இராஜேந்தரின் பாடல் இதோ...
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் மலர் உன்னை நினைத்து....தாரத்தா... மலர் தினம் வைத்தேன்..தாரத்தா... மைவிழி...பா ப ப ப ப பபப்பா... மயக்குதே..ஓ..ஓ..தனத் தனத் தனனா...ஹா.. டிஸ்கோ..டிஸ்கோ...டிஸ்கோ..டிஸ்கோ
தை..தை...தை தை தை... கவிதைகள் வரைந்தேன்...அதில் எந்தன் ரசனையைக் கண்டாயொ...ஹா.. கடிதங்கள் போட்டேன்...இதயத்தை பதிலாக்கித் தருவாயோ... முல்லை உன்னை அடைய, முயற்சியைத் தொடர்வேன் மௌனமாகிப் போனால் மனதினில் அழுவேன்.. பாவையின் பார்வையே அமுதமாம்..தகதகதகதக தூம்... தேவியின் ஜாடையே தென்றலாம்..தகதகதகதக தூம்...
தவம் கூடச் செய்வேன்...தேவதையே கண் திறந்து பாராயோ... உயிரையும் விடுவேன்...காப்பாற்ற மனமின்றி போவாயோ.. திரியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணெயென நினைத்து உன்னைத்தானே அழைத்தேன்.. நிலவே நீ வா நீ வா....தகதகதகதக தூம்... நினைவே நீதான் நீதான்...தகதகதகதக தூம்...
பாடல், இசை : டி. இராஜேந்தர். படம் : உயிருள்ள வரை உஷா.
|
|
| | |
|
|
|
|
|
|
|