|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Hi Koos Today
Hikoos Today !!! (06.09.2008)
***************************************************************
அடைமழை பெய்து ஓய்ந்தும் நிற்காமல் சொட்டும் துளிகள் ஓட்டை குடிசை வீடு !!
****************************************************************
என் வீட்டுத் தகர ஜன்னல் வெள்ளியாய் மின்னியது ! எதிர் வீட்டு ஜன்னலில் அவள் !!
******************************************************************
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Pudhukavidhai Indru
Back..Back Back..Back..
காதல்,காதல்,காதல்,காதல்......
இரு கண்களாய் பார்க்காமல் ஒரு கண்ணாய் இரு கால்களாய் நடக்காமல் ஒரு காலாய், இரு மனதாய் இல்லாமல் ஒரு மனதாய் இடைவிடாமல் இறுதி வரையிலுமாய் வாழ்வதுவே காதல் !!
தொலைவில் இருந்தாலும் அருகில், தொலைந்து போனாலும் நினைவில், தொல்லை தந்தாலும் கண்களில், தொடர்ந்து வாழ்வதுவே காதல் !!
காலங்கள் மாறினாலும் நிலையாய், காதல் செய்யும் விதம் மாறினாலும் உறுதியாய், காட்டில் உடல் எரியும்போதும் நெருப்பாய், காலம் வணங்க வாழ்வதுவே காதல் !!
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Tamil Song - Nadodi Pattu Paada..
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் இருபது வயதில் வருவது தானா காதல் அறுபது வரையில் தொடர்வது தானே காதல் சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹே...காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா..... நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும்போது மடியாக வேண்டுமே தட்டுத்தடுமாறி சோர்ந்து விடும்போது பிடியாக வேண்டுமே உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல் ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ...ஹே.... காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா.....
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
கங்கை நதியென்ன காவேரியென்ன எல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அது கூடப் பெண்மையே நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும் பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும்...ஹே....
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா.....
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
படம் : அரிச்சந்திரா பாடியவர் : எஸ்.பி.பி. பாடலாசிரியர் : ரவிசங்கர் இசை : ஆகாஷ்
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Tamil Song - Nee Varuyaay ena
Another excellent song of recent time. Watch here : http://www.youtube.com/watch?v=Jn_j04vUC7Q
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என.. பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என.. தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்..
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம் தினம் சேகரித்தேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன் கவிதை நூலோடு கோலப்புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும் உன் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை எழுதிய கவிதைகள் உனைவந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை உலகில் பெண் மட்டும் நூறு கோடியாம்..ம் அதிலே நீயாரடி சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழி பார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
படம் : நீ வருவாய் என பாடியவர் : எஸ்.பி.பி(on Screen : Parthiban) பாடல் வரிகள் : பா. விஜய் இசை : எஸ். ஏ. ராஜ்குமார்
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
A Chinese Story !
சமீபத்தில் நான் படித்து ரசித்த ஒரு சீன மொழிக் கதை.
ஹான் வம்சத்தைப் பேரரசர் வூ ஆட்சியின் போது, அரண்மனைக்கு ஏராளமான அன்பளிப்புக்கள் வந்தன. அவற்றிலே ஒன்று ஒரு அபூர்வமான மது ஜாடி. அதிலே இருந்த மதுவைக் குடித்தால் மரணம் இல்லை என்று சொல்லப்பட்டது. எனவே அதை மிகவும் பாதுகாப்பாக மன்னர் வைத்தார். சாகாமல் இருக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது! ஒரு நாள் அரசவைப்புலவர் துங்பாங் ஷுவோ திருட்டுத் தனமாக அந்த மதுவில் கொஞ்சம் குடித்து விட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மன்னருக்கு ஒரே கோபம். கொதித்துபோய் அரசவையைக் கூட்டினார். அமைச்சர்களைக் கலந்தாலோசித்தார். கடைசியில் புலவரை விசாரித்தார்.
"நீ மதுவை குடிச்சியா?"
"ஆமாம் அரசே!"
"எப்படிக் குடிச்சே!"
"இதென்ன கேள்வி மன்னா? வாயாலதான்."
எடக்கு மடக்கான இந்தப் பேச்சு மன்னரின் ஆத்திரத்தைத் தூண்டியது.
"பாதுகாப்பாக வைக்கப்பட்ட மதுவை நீ திருட்டுத்தனமா குடித்தாயா?"
"ஆமாம் அரசே!"
"உனக்குத் தெரியும் அந்த மது எனக்காக வைக்கப்பட்டிருப்பது என்று, பின்னே ஏன் குடிச்சே?"
"அரசே! ஆசைக்கு அந்தஸ்து தெரியுமா? மரணபயம் இல்லாம இருக்கணும்னு எனக்கு ஆசை வந்தது."
"அப்படியா உனக்கு மரண தண்டனை, இவன் தலையை வெட்டுங்க" என்று மன்னர் உத்தரவிட்டார்.
மன்னரின் தலைவெட்டித் தீர்ப்பைக் கேட்டதும் துங் புலவர் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
"ஏன் சிரிக்கிறே?"
"மன்னா நான் குடித்த மது சாகா வரம் தருவது. சாகாமல் இருக்கணும் தான் நீங்க அதைக் குடிக்க விரும்பினீங்க. இப்போ உங்க உத்தரவுப்படி எனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அந்த மது போலி என்று ஆகாதா? அதை நினைச்சேன். சிரிப்பு வந்தது."
மன்னர் ஒரு கணம் யோசித்தார்.
"சரி, பிழைச்சுப் போ" என்று பெருந்தன்மையாக மன்னித்து விட்டார்.
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
One Minute story - Credit Card
கிரெடிட் கார்டு
அனந்தராமனுக்காக அவன் ஆபிஸ் வாசலில் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து அவன் வந்தான். "டேய்.. எப்படிடா இருக்கே?", அவன் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டே வந்தான். சிறு வயதிலிருந்து நாங்கள் பால்ய சினேகிதர்கள்.
"நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன். Wife சீக்கிரம் வரச்சொன்னா. வெளில போகிறோம். என்ன விஷயம் சொல்லு", அவசர அவசரமாக கேட்டான்.
"ஒண்ணுமில்லடா. இந்த மாசம் கொஞ்சம் பணக்கஷ்டம்டா..அதான் உங்கிட்டே கொஞ்சம் ஐயாயிரம் ரூபா ...." என்று இழுத்தேன்.
"அடடா..சாரிடா..இப்போ என்கிட்ட அவ்வளவு பணமில்லட..மாமனார் மெடிக்கல் செலவு ஜாஸ்தியாயிட்டதனால நானே சிரமப்பட்டுகிட்டு இருக்கேன்டா, என்னை மன்னிச்சுக்கடா"
"பரவாயில்லடா..நோ ப்ராப்ளம்", சொல்லிவிட்டு எதிரில் உள்ள வங்கி ATM கௌண்டரை நோக்கி நடந்தேன். கையில் இன்னொரு நண்பன் கடனாய் கொடுத்த அவனது கிரெடிட் கார்டு இருந்தது, வட்டியோடு திரும்பக் கேட்டிருந்தான்.
கிரெடிட் கார்டை செருகி ரூபாய் ஐயாயிரம் என்று அழுத்தினேன்.
ஐயாயிரம் ரூபாய் வந்து விழுந்தது
அதே வங்கியின் பின்புறத்திலிருந்து அனந்தராமன் தன்னுடைய சேமிப்புக்கணக்கில் கட்டிய அதே ஐயாயிரம் ரூபாய் என்று இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை !
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
One Minute Story - SMART
ஸ்மார்ட் !
அன்றும்சீனி ஆபிஸில் நுழைந்ததும் எல்லோரும் வழக்கம்போல் அவனைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே அவனும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே அவன் இருக்கையை நோக்கி நடந்தான்.
"எப்ப பார்த்தாலும் போனிலேயே பேசிட்டுருப்பான், இவனுக்கு இவ்வளவு மதிப்பா ?"
"அப்படி என்னதான் போன்ல பேசுவானோ, இவனைப் போய் மேனஜராக்கியிருக்காங்க"
"நம்மெல்லாம் எவ்வளவு சிரம்ப்பட்டு என்னென்ன செய்யலை. இவன் ஒருநாள் கூட அதிகவேலை செய்ததில்லையே"
மதியம் ஓய்வுநேரம் வரும்வரையில் எல்லாருடைய கவனமும் அவன் மேலேயே இருந்தது. இவ்வளவு சொல்லியும் அவன் இன்றும் அதேபோல போனிலேயே பேசிக்கொண்டிருந்தான்.
சரியாக மணி ஒன்று அடித்தது. அனைவரும் சாப்பட்டு அறைக்குள் நுழைந்தார்கள். ஜெய்க்கு மட்டும் பொறுக்கவேயில்லை. நேரடியாக அவனிடம் கேட்டே விட்டான்.
சிரித்துக்கொண்டே சீனி பதில் சொல்ல ஆரம்பித்தான்.
"என்னோட datas எல்லாம் என்னோட வீட்டுக் கம்ப்யூட்டர்லயும் இருக்கு. தினமும் வீட்டுக்கு போய் என் லேப்டாப்-ல் உள்ளதெல்லாம் என் வீட்டு கம்ப்யூட்டர்ல சிங்க்ரொனைஸ் பண்ணி வச்சுடுவேன் என் wife MCA படிச்சிருக்கா. நான் இங்கே ஆபீஸ்ல என்னோட வேலைகளை பார்த்திகிட்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தா என் wife அங்கே வீட்டிலிருந்து எனக்கு உதவி செய்வாங்க. என்னோட job & reporting, especially forecastஆ இருக்கிறதனால என்னால பழைய Data-வெல்லாம் வைச்சுகிட்டு at one time ஒர்க் பண்றது ரொம்ப கஷ்டம். அதனால நானும் என் மனைவியும் போட்ட திட்டம் தான் இது. என் மனைவியும் கம்ப்யூட்டர்ல ரொம்ப திறமைசாலியா இருக்கிறதனால என் வேலை சுலபமா போயுடுது. சொல்லப் போனா, நாங்க இரண்டு பேருமே இந்தக் கம்பெனிக்காக வேலை செய்யறோம். ஆனா, அவளோட ஆபிஸ் விஷயமாத்தான் அடிக்கடி போன்ல பேசவேண்டியதாயிருக்கு. அதனாலத்தான் நான் போன்ல எப்போதும் பேசிக்கிட்டே இருக்கேன்"
சொல்லச்சொல்ல எல்லாருக்கும் அதிசயமாயிருந்தது.
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Tamil Songs
இந்தப் பாடலுக்கு ஒரு பெருமை உண்டு. இளையராஜாவின் இசைக்கு தமிழகமே மெய்மறந்து காது கொடுத்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, முற்றிலும் புதுமையான அதே சமயம் மறக்க முடியாத தமிழ் வரிகளால் அலங்கரித்து இந்தப் பாடல் மூலம் எல்லாரையும் தன் பக்கம் கவர்ந்தவர் டி.இராஜேந்தர், எம்.ஏ. தவிர, ஹிந்திப் பாடல்களின் தாக்கம், டிஸ்கோ, மேற்கத்திய இசை இவைகளெல்லாம் தலை தூக்கிக்கொண்டிருந்த தருணம் அது. அந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு மெட்டுப்போட்டு, நல்ல வரிகளையும் கொடுத்த டி. இராஜேந்தரின் பாடல் இதோ...
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் மலர் உன்னை நினைத்து....தாரத்தா... மலர் தினம் வைத்தேன்..தாரத்தா... மைவிழி...பா ப ப ப ப பபப்பா... மயக்குதே..ஓ..ஓ..தனத் தனத் தனனா...ஹா.. டிஸ்கோ..டிஸ்கோ...டிஸ்கோ..டிஸ்கோ
தை..தை...தை தை தை... கவிதைகள் வரைந்தேன்...அதில் எந்தன் ரசனையைக் கண்டாயொ...ஹா.. கடிதங்கள் போட்டேன்...இதயத்தை பதிலாக்கித் தருவாயோ... முல்லை உன்னை அடைய, முயற்சியைத் தொடர்வேன் மௌனமாகிப் போனால் மனதினில் அழுவேன்.. பாவையின் பார்வையே அமுதமாம்..தகதகதகதக தூம்... தேவியின் ஜாடையே தென்றலாம்..தகதகதகதக தூம்...
தவம் கூடச் செய்வேன்...தேவதையே கண் திறந்து பாராயோ... உயிரையும் விடுவேன்...காப்பாற்ற மனமின்றி போவாயோ.. திரியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணெயென நினைத்து உன்னைத்தானே அழைத்தேன்.. நிலவே நீ வா நீ வா....தகதகதகதக தூம்... நினைவே நீதான் நீதான்...தகதகதகதக தூம்...
பாடல், இசை : டி. இராஜேந்தர். படம் : உயிருள்ள வரை உஷா.
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Hi Koo Today
கி.பியிலும், கி.முவிலும் நடந்ததை படித்துக்கொண்டிருந்தேன் ! மூன்று முன்னோதையர் பெயருக்குமேல் தெரியாத நான் !!
**************************************************************
நீண்ட நேரமாய் க்யூவில் நின்று சுவாமி தரிசனம் கிடைத்தபோது கண்மூடி ப்ரார்த்தனை செய்தேன் !!!
|
|
| | |
|
|
|
|
|